Monday 11 February 2013

காதல் காதல் காதல் போயின் .........(காதல் கலவை ஒன்று)

இன்னும் இருக்கிறது 
காதல் கடிதம் 
காதல் ......................!!!

*************

முன்னிரவுகளில் 
நட்சத்திரங்களை தூவிய விழிகளை 
அடித்து சென்றுவிட்டது 
ஆதவக்கரங்கள்.

************

மெல்லியதாய் எங்கோ ஒலிக்கிறது 
சோகப்பாடல்,
சோர்ந்து போய்
உச்சரிக்கிறது உதடு.

***********

அன்று,
இதே நிலா 
நீயும் நானும். 
அதோ நிலா
நீ .................!!!

************

மலர்தாவிய வண்டை 
திட்டினாய்.
வியந்தேன்.............
மனம் மாறி திட்டினாய். 
சிதைந்தேன்.

***********

உன்னை சந்திக்கும் 
அந்த நேரம் கடக்கையில்
நரகம் தெரிகிறது. 
கடந்தபின்.......
மரணம் புரிகிறது. 

*************

கைதவறி பட்டபோது 
தடுமாறிய  மனது நீ 
கரம்பற்றிப்போனபோது 
அனாதையாய் போனது ............

***********

உன்னை பார்த்ததை விட 
உன் வீட்டு 
கதவை, யன்னலை, சைக்கிளை 
பார்த்து அதிகம்.

************

முதல் தரம் 
இல்லையடா என்றாய் 
இரண்டாம் தரம் 
என்னடா என்றாய் 
மூன்றாம் தரம் 
ம்ம்ம்ம்ம்ம்ம் என்றாய் 
அப்போதும் புரியவில்லை 
அதுதான் காதல் என்று.

*************

வளைந்த பூவரசும் 
வேலிக்கிளுவையும்
ஒற்றைத்தென்னையும்
சொல்லிக்கொண்டிருக்கின்றன 
காற்றில் என் காதலை.

**********

நானும்,  
உன் பெற்றோரும்,
ரோடுகளில் காவலிருந்த 
காலங்கள் கடந்திருக்கலாம் ........
காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

***********

திட்டி துப்பிய எச்சிலையே 
தேடித்திரிந்தவன்.
நல்லவேளை 
நீ மட்டும் கிடைந்த்திருந்தால்...................  

6 comments:

  1. ஏக்கம், கோபம், வெறுப்பு - இவை அதிகம் தெரிகிறது...

    ReplyDelete
    Replies
    1. வருக திண்டுக்கல் தனபாலன்.எல்லாவற்றினதும் கலவை தானே காதல்.
      நன்றி வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  2. குறும்பாவின் ஒவ்வொரு வரிகளிலும் இருக்கும் காதலின் தாகம் உணர்வுக்குள் ஊடுருவிச் செல்கிறது.. வார்த்தைகள் அழகாக இணைந்து சுவையாகத் தான் சொல்லவந்ததைச் சொல்லிச் செல்கிறது.. அசத்தல்
    வாழ்த்துக்கள் தம்பி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா.சொல்லிசென்றது உங்களின் மனதுக்கும் பிடித்திருப்பதையிட்டு மகிழ்கிறேன். நன்றி அக்கா வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்

      Delete

  3. எருக்ககலை நாயுருவி

    குருக்கத்தி கூப்பிட்டுக்குத்தி

    இவைக்கே தெரியும் என் காதல்.



    நாய்படாப்பாடு பட்டிருக்கிறியள் :lol: :D :icon_idea: . வாழ்த்துக்கள் நேற்கொழுவன் .

    ReplyDelete
    Replies
    1. இதுவெல்லாம் நான் பட்டபாடுகள் அப்படியென்று சொல்ல முடியாவிட்டாலும்,அப்படி அலைந்தவங்களோடு.... திரிந்த அனுபவங்கள்.
      நன்றி கோமகன் ஐயா.

      Delete