Monday 8 October 2012

நுகராத வாசனை

மலர் உதிரும்  ஓசையொன்றால்
குலைந்து போனவன் 
தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான்.

தேர்ந்த ஓரிடத்தில் 
நிறங்களை ஒதுக்கி
மௌனப்பாறைகளால் சுவர்களையும், 
நிர்வாணத்தை நிகழ்த்தி 
தனிமையால் புதர்களையும் 
உருவாக்கினான் முதலில். 

இருளடர்ந்த சுவருக்குள் 
வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க 
வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் 
கிளைகளின் ஈரலிப்பில் 
பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் 
மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான்.

கல்லறையின் வாசலில் 
இறகொன்று கிடந்தது 
பறத்தல் பற்றிய கனவோடு...................


10 comments:

  1. ஆழ்மன சோகமும், தோல்வி, பிரிவு, இழப்பு என்பது யதார்த்த வாழ்வின் அங்கம் என்பதை விரவி நிற்கும் கவிதை. மிக அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இக்பால் செல்வன்,
      முதல் என்பது எல்லாவற்றிலும் மகிழ்வானதாகவும்,மறக்கமுடியாதைவையும் ஆகிவிடுகிறது, கருத்திலும் சரி காதலிலும் சரி . உங்களின் வரவுகளாலும், கருத்துக்களாலும் என் இருத்தலை இன்னும் அர்த்தபடுத்திக்கொள்ள முனைகிறேன்.
      நன்றி சகோ

      Delete
  2. பறக்கட்டும் இறகு மட்டுமல்ல இதயமும்... முதல் மறந்து முழுதாய் புதுசாய்.

    ReplyDelete
    Replies
    1. பறத்தல் பற்றிய கனவுகள் நீண்டுகொண்டுதானிருக்கிறது,எல்லைகள் தான் தாண்டிப்போகிறது.
      நன்றி நண்பனே வாழ்த்துக்கும் வரவுக்கும்.

      Delete
  3. இறகொன்று கிடந்தது பறத்தல் கனவோடு அற்புதமான வரிகள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி உறவே ....வரவுக்கும் கருத்திடலுக்கும்.

      Delete
  4. Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன், உங்களையும் இந்த படைப்பு கவர்ந்திருப்பதையிட்டு மகிழ்கிறேன். ...நன்றி வரவுக்கும் கருத்திடலுக்கும்.

      Delete
  5. என்ன சொல்வதென்றே புரியவில்லை
    மீண்டும் மீண்டும் படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நண்பனே,
      எதோ ஒரு வகையில் உங்களின் தேடலை தூண்டும் வகையில் இந்த படைப்பு இருந்ததையிட்டு மகிழ்கிறேன்.வாருங்கள் தொடர்ந்தும் கருத்தாடுவோம்.

      Delete