Monday 24 September 2012

அறிவிக்கப்படும் சுயரூபம் ......................


தொலைந்துபோதல் 
எப்போதும்  எங்கேயும் 
இலகுவான ஒன்றல்ல,

தொலைவதற்கு முன்னான கணங்கள் 
தயார்ப்படுத்தலின் தளம்பல்களை 
வெளிவிடும் ஒரு நீர்வட்டம் போல,

ஒவ்வொன்றாக விலக்கிய பின்னும் 
ஒன்றாவது விலகாமல் நிலைத்திருக்கும் _அது 
குற்றஉணர்ச்சியாகவும் இருக்கலாம்.

இருளின் கனதியொன்றை ஊடறுக்கும் 
தெருநாயின் ஊளையைப்போலவும்
வயல்வெளிகளில் எதிரொலிக்கும் 
ஆட்காட்டிகளின்  அவலசத்தமாகவும்
உன் மூச்சு சத்தமே உனக்கு கேட்கலாம்.

தடயங்களை அழிக்க தொடங்குதல் 
தடயமாகிவிடும் சாத்தியத்தை 
விழிகள் அல்லது  மௌனம் 
சொல்லிவிடும் எல்லோருக்கும்.

அதற்கு பின்னான 
உனது கணங்களை அறிவதற்கான 
முயற்சியாகவும் இருக்கலாம்.
அப்படியாக  மட்டும்  இருந்துவிட்டால்,

அதற்கான 
முழுப்பொறுப்பையும் சுமக்க வேண்டிய
பரிதாபத்துக்குரியவர்கள் நாங்களே.


6 comments:

  1. ///தடயங்களை அழிக்க தொடங்குதல்
    தடயமாகிவிடும் சாத்தியத்தை
    விழிகள் அல்லது மௌனம்
    சொல்லிவிடும் எல்லோருக்கும்///
    ம்ம்ம்... சிந்தனையின் உச்சம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வார்த்தைகளால் அரவணைத்து செல்லும் உங்களின் வரவுக்குக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி நண்பனே .

      Delete
  2. Replies
    1. மதுரை சரவணன்.வலையுலகில் என் வளம் வருகையை ஊக்குவிக்கும் வார்த்தைகளை உதித்துள்ளீர்கள். நன்றி நன்றி

      Delete
  3. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    அருமையாக (உண்மை) முடித்துள்ளீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.
      என் இருத்தலை இன்னும் இன்னும் தூண்டுகிறது உங்களின் வார்த்தைகள் நன்றி ஐயா.

      Delete