Tuesday 25 September 2012

கண்ணீரை சேமிப்பவன்


தூரிகை தொடாத வர்ணத்தின் 
துர்மணமாய் அடங்கிக்கிடக்கும் 
ரணமொன்றின் கசிவுகள்,
அதிகாலை அமைதிக்குள் 
வான் துப்பும் தீக்கங்குகளாகி தெறித்து 
கருகி கரையும் ஆதங்கத்தோடு.

வடிகால் தேடாத கசிவுகளின் திசுக்கள் 
கடவுளாகி இருந்தது.
மந்திரங்களும் மலர் அர்ச்சிப்புக்களும் 
கைதட்டல்களும் கரைந்து கொண்டிருந்தன.

புடம் போடுதலென்ற போர்வையில் 
வடிவங்களை மாற்றிய பின்னும் 
அந்தரங்க துவாரங்களில் வழிந்துகொண்டிருந்தது
கசிவுகளின் வன்மம் துர்வாசனையோடு. 

கரையாத திசுக்களின் வேர்களில் 
கண்ணீரை பாச்சத்தொடங்கினேன்......
உவர்ப்பின்  பிசுபிசுப்பில் கருகத்தொடங்கியது
திசுக்கள் ஒவ்வொன்றாக ....

அக்கணமே 
சேமிக்கதொடங்கினேன் கண்ணீரை _இனி 
எங்கெல்லாம் ரணங்களோ 
அங்கெல்லாம் வருவேன் சுமந்து.

5 comments:

  1. Replies
    1. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அண்ணர்.
      வரிகளில் மட்டும் வேதனை இருக்கடுமே
      என்ன சொல்லுறிங்க ம்ம்ம்ம்

      Delete
  2. கசிவுகளின் வன்மம் துர்வாசனையோடு. /ம்ம் இந்த வரிகளே சொல்லும் அத்துமீறலின் நிலையை அழகான் கவிதை சகோ!

    ReplyDelete
  3. கணனியில் தொடர்ந்து இருக்க முடியாது பாஸ் பின்னூட்டம் கைபேசியில் போடும் வசதியை செய்து தாருங்கள் என் உலகம் கைபேசியில் தான் அதிகம்!ஹீ

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பனே வரவுக்கும் கருத்திடலுக்கும். நிச்சயமாக செய்கிறேன் ............

      Delete