Tuesday 18 September 2012

யதார்த்த யாத்திரிகன்


ஏகாந்த பொழுதொன்றில் 
அலையத்தொடங்கிய நினைவுகள் 
பரிணாமத்தின் முடிவில் 
ஏதிலியாய் உணர்ந்தன

ஆதியின் போர்வைகளுள் 
தனக்கான சிதையொன்றை  உருவாக்கி 
காத்திருக்கதொடங்கியது நாளைக்காக.......

அந்த கணங்களில் 
அவற்றின் பிளவுகளூடாக 
வழிந்துகொண்டிருந்தது ஆற்றாமையின் நிழல் 
உருவமற்ற அவற்றின் கனதிகளால் 
மிக மிக ஆழத்தில் அமிழ்த்தப்பட்டது  
வாழ்வுக்கான அர்த்தம்.

ரகசிய பெருமூச்சின் ஒலிகளால் 
ஊழிக்கால அழிவுகளை 
உள்ளெங்கும் நிகழ்த்திவிட்டு 
இறுகிப்போனது வைரமாய் உள்ளேயே ,

இப்போதெல்லாம் .......
சரித்திர புன்னகைகளை வழியவிடும் 
உதடுகளின் ஓரங்களில் 
சலனமில்லாமல் நிகழ்ந்துவிடுகிறது
அழகிய மரணமொன்று.

14 comments:

  1. அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி முடிந்தால் வந்து போங்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி உறவே ,நிச்சயமாக வருகிறேன் இனி தொடர்ந்தும் வருவேன் ........

      Delete
  2. நன்று.
    இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ,
      வந்து பார்க்கிறேன்

      Delete
  3. நண்பரே தமிழில் புதிய வார்த்தகளைக் கொண்டு எழுதியுள்ளீர்கள் போல எனக்கு சில சொற்கள் புதியவை

    அருமையான கவிதை என்று கருத்திட முன் புதிய சொற்களுக்கான விளக்கங்களை தேடிவிட்டு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நண்பனே,மிகவும் சந்தோசமாக உள்ளது .எதோ ஒருவகையில் உங்களின் தேடலை தூண்டியுள்ளமை குறித்து மகிழ்கிறேன்.
      ஆனால் கட்டாயம் வந்து கருத்திடனும் .............காத்திருக்கிறேன் என் நண்பனின் கருத்துக்காக.

      Delete
  4. Replies
    1. நன்றி அண்ணா,உங்களின் வரவுகளால் பெருமையடைகிறேன் .

      Delete
  5. இயல்பு தாண்டி குற்றவுணர்வுடன்
    பயணிக்கும் சாதாரண பயணி....ம்ம்ம்...
    (புரியாத புதிர் சொற்றொடர்...!!!)

    ஆழமான உட்கருத்து கவிதை.
    “யதார்த்த யாத்திரிகன்“ னில் யதார்த்ததைத் தேடுகிறேன்.
    வாழ்த்துக்கள் நட்பே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உறவே வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்
      இந்த யாத்திரிகனோடு பயணிக்க உங்களையும் வரவேற்கிறேன் ...

      Delete
  6. // சரித்திர புன்னகைகளை வழியவிடும்
    உதடுகளின் ஓரங்களில்
    சலனமில்லாமல் நிகழ்ந்துவிடுகிறது
    அழகிய மரணமொன்று.//

    அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பனே,வரவுக்கும் கருத்திடலுக்கும்.இனியும் காத்திருப்பேன் உங்களின் விமர்சனத்துக்காக

      Delete
  7. வணக்கம்

    அழகிய மரணம் என்றே
    அளித்துள கவிதை கண்டேன்!
    பழகிய நாளாய் நானும்
    பார்த்திடா அடிகள்! தேனில்
    முழுகிய தமிழை உண்டு
    முணுங்கிடும் விருத்தம்! சீா்கள்
    விழுமிய வலையைக் கட்டும்
    நெற்கொழு தாசன் வெல்க!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா,
      அகமகிழ்ந்து ஆற்றியவுரை பார்த்து
      மிகநெகிழ்ந்து ஆயினேன் உங்கள் அடிமையாய்.

      ஐயா,உங்களின் வாழ்த்தும், ஆசிர்வாதமும் கிடைக்க உண்மையில் நான் பெரும் பேறு பெற்றிருக்கவேண்டும்.
      நன்றி ஐயா.

      Delete