Monday 27 August 2012

கான(ண)ல்

 நிராதரவான இந்த பொழுதில்_என்
கைகளை நானே பற்றிக்கொண்டு 
மிக மிக அமைதியாக...................,

பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது
வந்துபோன சுவடும் 
உதிர்த்துப்போன வாசமும்.
எல்லாப்பக்கங்களும்
எதிரொலிகளால் நிரம்பியிருந்தது,
இரட்டிப்பாய் மோதிக்கொண்டிருந்தது 
ஒற்றை வார்த்தை மட்டும்.
 
உலர்ந்துபோன காற்றில் 
கரைந்துகொண்டிருந்தது வியர்வை.
உடைந்துபோன மனதில் 
பெருகிக்கொண்டிருந்தது கண்ணீர்.

மௌனத்தின் பக்கங்களை உணவாக்கி 
வினோத ஒலிக்குறிப்புக்களை
பிறப்பித்துக்கொண்டிருந்தது நினைவுகள்.
யாரோ யாருக்கோ தெளிவுபடுத்துகிறார்கள் 

நுண்ணிய சலங்கைஒலி மட்டும் 
தேய்ந்து வளர்ந்து தேய்ந்து .............
இந்தகணங்களில் வந்துவிடவும் கூடும்.

அதற்காக,
நிராதரவான இந்த பொழுதில்_என் 
கைகளை நானே பற்றிக்கொண்டு 
மிக மிக அமைதியாக...................,

அருகில் சருகாய் கிடக்கிறது 
ஒற்றை சிகப்புரோஜா ...........


6 comments:

  1. அழகான கவிதை அழகான வரிகளில்
    மிகவும் கவர்ந்த வரிகள்

    உலர்ந்துபோன காற்றில்
    கரைந்துகொண்டிருந்தது வியர்வை.
    உடைந்துபோன மனதில்
    பெருகிக்கொண்டிருந்தது கண்ணீர்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பனே,வருகைக்கும் கருத்திடலுக்கும்.

      Delete
  2. நானும் சில வேளைகளில் இந்த நிலையில்
    இருந்த கணங்களை நினைவுறுத்திப்போகும்
    அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி,திரு ரமணி அண்ணா ,உங்களின் நினைவுகளையும் இந்தபதிவு மீள நினைவூட்டியிருந்தால் எனக்கும் அது மகிழ்வே.நன்றி வரவுக்கும் கருத்திடலுக்கும்

      Delete
  3. வெறுமையான இதயத்தில் இருந்து வற்றாத வரிகளாய் கவிதை வரிகள்.. கவிதை சொல்வதென்னவோ சோகங்களை...மனதில் அடக்க இயலா சொல்லவொன்னா வேதனைகளை மெல்லிய கண்ணீர் கோடு கோடிட்டு காட்டுகிறது உருக்குலைத்து வீசிவிட்டுச்சென்ற அன்பை...

    நிராதரவான அன்பு இங்கு பாடுகிறது சோககீதத்தை.... நிஜங்கள் எல்லாம் இப்போது வெறும் நினைவுகளாக.... நினைவுகள் மட்டுமே இப்போது (மன)காயங்களை கீறிவிட்டு ஆற்றத்துடிக்கும் மருந்தாக.....

    எத்தனை உதறிச்சென்றாலும் வீசிவிட்டுச்சென்ற அன்புக்காகவே இந்த கவிதை ஒரு தூதாகிவிடாதோ என்ற ஏக்கம் ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலிக்கிறதுப்பா...

    வந்துச்சென்ற சுவடுகளும்
    உதிர்த்துவிட்ட வாசமும்
    நினைவுகளை கீறிவிட்டுச்சென்றதை சொல்லி அறைகிறது மௌனத்தினால்....

    அழகிய உவமைகளை கவிதையில் உட்புகுத்தி மிக அருமையான கவிதையை அமைத்து எங்களையும் இந்த சோகத்தில் ஆழ்த்திவிட்ட அதிசயம் இந்த அழகிய கவிதை....

    அன்பு வாழ்த்துகள் நெற்கொழுதாசன் தொடரட்டும் கவிதை வேள்வி....

    ReplyDelete
    Replies
    1. எத்தனை உதறிச்சென்றாலும் வீசிவிட்டுச்சென்ற அன்புக்காகவே இந்த கவிதை ஒரு தூதாகிவிடாதோ என்ற ஏக்கம் ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலிக்கிறதுப்பா...

      அருமையான ஒரு விமர்சிப்பு,உண்மையில் திரும்ப ஒருதடவை நானே வாசித்தேன்.நன்றி மஞ்சுபாஷிணி.உங்களின் வரவையிட்டு மிகவும் உற்சாகமடைகிறேன்.தொடர்ந்து விமர்சியுங்கள்.காத்திருக்கிறேன்........

      Delete