Friday 3 August 2012

யாசிப்பு...............

கனவுகளை யாசிக்க தொடங்கியவன். 
யாசிக்க தொடங்கியதால் 
கண்ணீர்களை உறவாக்கி கொண்டவன்.

நேசிப்புக்களை  விதைத்தவன் 
எங்கும் விதைத்ததால்
வலிகளையே அறுவடையாக்கி கொண்டவன்.

அரவணைக்க கரம் விரித்த போதெல்லாம் 
புறந்தள்ளப்பட்டவன்.
புறந்தள்ளப்பட்டதால் ஒரு 
கவியானவன்.

எரிமலைகளாலும் கரியாகாதவன். 
விழிமழையென்றால் அழியவும் தயாரானவன்.

தோள் கொடுத்த போதெல்லாம் 
படியானவன்,
தேவை முடிந்தபின்னே 
மிதியடியானவன்.

கூடியோலிக்கையில் குரலானவன் 
கூட்டம் கலைந்தபின்னே 
நடைபிணமானவன்.

வேதனைகள் மேல்நின்று 
சிரிக்கதெரிந்தவன்_சிரிப்பதால்,
சித்தனோ என்று திகைக்க வைத்தவன்.

இவன் 
கொடுத்தலையே கொண்டவனாதலால்
வேண்டுதலுக்காய் தயங்குகிறான்.
இருந்தும் இரங்குகிறான் உங்களிடம்.

மறந்துமென்
கல்லறை மீதில் 
பூக்களையோ_உங்கள் 
கண்ணீர் துளிகளையோ தூவாதீர்கள்!!
இருக்கும்வரை கிடைக்காதவொன்றை
என்றைக்குமே விரும்பியதில்லை இவன் !!!

4 comments:

  1. கல்லறையில் சரி அந்த ஜீவன் கண்மூடி யாசிக்கட்டும் அமைதியாக!

    ReplyDelete
  2. மிகவும் நன்றிகள்.வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் திரு தனிமரம்

    ReplyDelete
  3. மறந்துமென்
    கல்லறை மீதில்
    பூக்களையோ_உங்கள்
    கண்ணீர் துளிகளையோ தூவாதீர்கள்!!
    இருக்கும்வரை கிடைக்காதவொன்றை
    என்றைக்குமே விரும்பியதில்லை இவன் !ஃஃஃஃஃஃஃ
    முகநூலில் தெளிவாக கருத்திட முடியவில்லை சொந்தமே!!!மிக நேர்த்தியாக நெய்யப்பட்ட கவிதை இது.அதிலும் மேற்சொன்ன வரிகள் இன்று வரை நினைவை விட்டு நீங்கவில்லை.இவ்வரிகளை என் அம்மாவிற்கும் அறிமுகப்படுத்தி விட்டேன்.சில படைப்புகள் நமக்காக எழுந்தவையோ என எண்ணத்தோன்றும்.நம்மை கதை மாந்தராக்கிக்காட்டும்.அது தான் அந்தப்படைப்பாளியின் வெற்றி.ந்த வகையில் தாங்களகும் பெருத்த வெற்றி பெற்றதாக மனம் சொல்லுகிறது.வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. மிக மிக சந்தோசம் உறவே உங்களின் வரவுக்கும் கருத்துக்கும்.இருந்தாலும் உங்களின் கருத்துரைவு என்னை முழுமையாக பாதித்துள்ளது
      .இந்த கவிதையை எழுதியிருக்க வேண்டாமோ என்று தோனுகிறது இப்ப ....................

      Delete