Tuesday 29 May 2012

ம்ம்மம்மம்...........




நாவீரமாய்,
விலக்கவோ
இழக்கவோ முடியவில்லை
நினைவுகளை .............

கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை
வெடித்தெழும் போதை _உன்
விழி மடிக்கையில்


                                                                                                                 
                                                                                                                


                                                                                                                


விழுதுப்பாலாய்
ஒட்டிவிட்டது
 வெண்சிரிப்பு _இனி
அழுது முடியுமோவென்
 பிழைப்பு 


                                                                                                         
பாடை மேளம் எல்லாம்
தயாராக,
ஊர்வலம் பிந்துகிறது .
அட நான் இன்னும்
சாகவில்லையே ............!

வத்தாக்கிணற்றடியில்
முத்தாதகொவ்வை பளபளப்பு,
பாவற்காய் மினுமினுப்பு,
என்னவோ செய்யுது,



சரம் தூக்கி நடப்பது 
றோட்டில் நாயை
துரத்தி ஓடி மகிழ்வது _என்
மட்டுமிருந்த எனை
தாடி சொறிந்து வானம்
 பார்க்க வைத்த கொடுமை



காத்தடிக்க நீவர
சைக்கிள் கடையிலிருந்த
எனக்கல்லவா வேர்த்தது ?


எப்பவோ எப்படியோ பார்த்த
கால்முடிகள் ,
இப்பவும் அப்படியே
நிறைந்திருக்கின்றன .......

உன்னறையில் விளக்கெரிந்தால்
கல்லெறி வேண்டும் பக்கத்துவீட்டான்
செய்த பழிதான் என்ன ?

ஐயருக்கு சில்லறை
வைரவருக்கு வடை
எனக்கு நீ
கோவிலில் வேறென்ன ?

திரும்பி பார்த்த நீ
விரும்பி பார்க்கவில்லை
திரும்பி பார்த்ததே
கரும்பாய் இனிக்க தவறவில்லை!



எல்லோருக்கும் எல்லாமும்
கிடைத்திருந்தால்    
எனக்கும் நீ கிடைத்திருப்பாய்





2 comments:

  1. arumaiyaana siru kavithaikal. palaiya ninaivukalai konduvarukinriirkal. sirippinai adakkamudiyavillai. thodaraddum unkalin pani pani.
    irandu suli na vum moonru suli na vum

    ReplyDelete
  2. இனிய வணக்கம் தம்பி..

    ///வத்தாக்கிணற்றடியில்
    முத்தாதகொவ்வை பளபளப்பு,
    பாவற்காய் மினுமினுப்பு,
    என்னவோ செய்யுது///

    இந்தத் துளிப்பா கவர்கிறது...
    அதிலும் பாகற்காய் மினுமினுப்பு..
    அதிகம் பயன்படுத்தப்படாத உவமானம்...

    வாழ்த்துக்கள் தம்பி...

    ReplyDelete