Wednesday 9 May 2012

ஓங்கியொலிக்கட்டும் எங்கும்............


நாகரிக வாழ்வியலில் ஈடுபடத்தொடங்கிய மனித சமுதாயம் வர்க்க பாகுபாடு உடையதாக மாற்றமடைந்து ,சக மனிதனின் உரிமைகளை மறுத்து அவனை அடக்கி அடிமையாக்கி உழைப்பை சுரண்டும் ஒரு மிருகத்தனமான முதலாளித்துவ இயல்புக்குள் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்,அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து,சமுதாய வாழ்வியலில் சரிசமனாக வாழ்வியலை பெற எழுந்த போராட்டங்களே இந்த மேதினம் உருவாக அடிப்படைக்காரணம் .(இதுகுறித்து விரிவான விளக்கம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் )சுமார் ஒரு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய இந்த புரட்சி இன்று எந்த மாற்றத்தை மனிதசமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கிறது ? குறிப்பாக ஈழத்தமிழர் வாழ்வியலில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது ?

ஈழத்தமிழர் பிரதேச இருப்பில் தொடர்கின்ற, இன அடக்குமுறைகள் ,உரிமை மறுப்புக்கள் ,சாதிய கட்டமைப்புக்கள் என நிகழும் பல வடிவங்களால் இன்னும் இன்னும் சமுதாய குழுமங்களை உருவாக்கி உள்ளதே தவிர சக மனிதன் மீதான எந்தவொரு கரிசனைகளையும் உருவாக்கவில்லை. உருவாக்கும் சக்திகளும் ஊக்குவிக்கப்படவில்லை. இந்தநிலை எமது மதம் சார்ந்த நிலையில் இருப்பதாலும் ஓரளவு கட்டிக்காக்கப்படுகிறது என்பது வெளிப்படையானது .

இன்றைய நிலையை பார்த்தால் எம் பிரதேச நிலமெங்கும் மேதினக்கொண்டாட்டங்கள் அடக்கியாளும் அதிகாரவர்க்கத்தாலும்  அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பைவர்களாலும், கொண்டாடப்படுவதை காணலாம் .எதனை 
எதிர்த்து மேதினம் உருவானதோ, அந்த சக்தியே அதனை தன் அரசியல் இருப்புக்கான ஆயுதமாக பாவிப்பதை காணலாம் .காலப்போக்கில் சாதாரண மக்களாகிய எங்களுக்கு ஒரு விடுமுறை தினமாகவும், அரச அதிகார வர்க்கத்துக்கு கூட்டம் கூடுமொரு நாளாகவும் மாறிவிடக்கூடும். சமுதாய மாற்றத்தினை நிகழ்த்திய ஒரு நாள், ,உழைக்கும் வர்க்கத்தை உயர்த்தி அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு நாள்,அடக்குமுறையாளர்கள் கையில் இருந்து மீட்டு உழைக்கும் மக்களின் கரங்களில் ஒப்படைக்கப்படவேண்டும் முதலில் .








வர்க்க பாகுபாட்டை சிதைக்கும் நாளின் பொருளுக்காய் எழுதிய கவிதை ஒன்று ................

தினம் நினைக்கப்பட
திணிக்கப்பட்ட தினமல்ல,
மனிதம் பேசும் மரபுக்காயெழுந்த
மகத்தான தினமிது!
மூர்க்கம் கொண்ட முதலாளி
வர்க்கம் கலைக்கும் வகையறியாது,
பார்க்குமிடமெல்லாம் வதைபட்டு
வேர்த்தவொருவனின் வேதனை
சிதைத்த தினமிது!!

புரட்சியின் பரிணாமமாய்
எழுந்தான் எங்கெல்ஸ்,
பொங்கிவெடித்தான் மார்க்ஸ்_அரசியலில்
அழைத்துவந்தான் லெனின்.
தோழர்கள் தோள்மேல் பயணப்பட்ட எழுச்சி
விதைத்துவைத்தது தொழில்புரட்சி.

ஓங்கியோலிக்கட்டும்
இங்குமினி புரட்சியின் குரல்,

அடக்குமொரு அரசினை _மனிதம்
மறுக்குமதன் அரசியலிருப்பினை,
பாசிச தலைவர்களை _இன
அழிப்பின் இயங்குபொறிகளை
இனங்காட்டி
ஓங்கியோலிக்கட்டும்.

உழைக்குமொருவனின் உரிமைகள்
இழக்கப்படாதிருக்க,
இடவாதம் மதவாதம் கடந்தொரு
தேசம் எழுந்திட,

ஓங்கியோலிக்கட்டும்
இங்குமினி புரட்சியின் குரல்

1 comment:

  1. வித்தியாசமாக இருக்கிறது...

    நீங்கள் கம்பர்மலையா?

    அந்த படம் வைர கோயில் ஆலமரம் தானே..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

    ReplyDelete